பிரான்ஸ் தயாரிப்பாளர் கொலை வழக்கில் பிரித்தானியர் 115,000 யூரோக்கள் இழப்பீடு வழங்க உத்தரவு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர் கொலை வழக்கில் பிரித்தானியர் ஒருவர் 115,000 யூரோக்கள் இழப்பீடு வழங்க பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது!

பிரான்ஸ் நாட்டவரான Sophie Toscan du Plantier என்னும் பெண்ணை 1996ஆம் ஆண்டு அயர்லாந்தில் வைத்து கொலை செய்ததாக Ian Bailey (62) என்னும் பிரித்தானியர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால் அவர் தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்ததோடு, அயர்லாந்து அரசும் அவர் மீது தாங்கள் குற்றம் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி அவரை பிரான்ஸ் நாட்டிடம் ஒப்படைக்க மறுத்து வந்தது.

நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த மாதம் பாரீஸ் நீதிமன்றம் ஒன்று Ian Bailey ஆஜராகாமலேயே அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இதற்கிடையில் பிரான்சில் உள்ள ஒரு குறிப்பிட்ட சட்டத்தின்படி குற்றத்தின் அல்லது தீவிரவாதத்தின் காரணமாக உயிரிழந்தோருக்கு அரசே இழப்பீடு வழங்கக் கோரலாம்.

அதன் அடிப்படையில் Sophieயின் குடும்பத்தாருக்கு பிரான்ஸ் அரசு இழப்பீடு வழங்கியது.

Sophieயின் பெற்றோருக்கு ஆளுக்கு 25,000 யூரோக்களும் அவரது மகனுக்கு 30,000 யூரோக்களும் வழங்கப்பட்டன.

Sophieயின் இரண்டு சகோதரர்களுக்கு ஆளுக்கு 15,000 யூரோக்களும், அவரது மாமாவுக்கு 5,000 யூரோக்களும் இழப்பீடாக வழங்கப்பட்டன.

தற்போது Sophieயின் குடும்பத்தாருக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையான 115,000 யூரோக்களை, Ian Bailey அரசுக்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் Ian Baileyயை பிரான்சுக்கு கொண்டு வருவதற்கான வாரண்ட், வரும் வாரங்களில் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்