பிரான்ஸ் ஜனாதிபதி கொடுத்த மரம் பட்டுப்போனது கெட்ட சகுனம்: விமர்சனத்துக்கு மேக்ரான் மறுப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
188Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அமெரிக்கா சென்றபோது, அவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் இணைந்து நட்ட மரம் பட்டுப்போனது கெட்ட சகுனம் என்ற விமர்சகர்களின் கருத்துக்கு மேக்ரான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதல் உலகப்போரின்போது ஜேர்மானியர்களால் 2,000க்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட பிரான்ஸ் காட்டிலிருந்து அந்த ஓக் மரம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மேக்ரானும் ட்ரம்பும் இணைந்து அந்த மரத்தை வெள்ளை மாளிகை தோட்டத்தில் நட்டனர்.

பின்னர் வெள்ளை மாளிகை வழக்கப்படி அந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறிடத்தில் நடப்பட்டது.

ஆனால் அது பின்னர் பட்டுப்போயிற்று. அந்த மரம் பிரான்ஸ் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைக் காட்டுவதாக கருதப்பட்ட நிலையில், அது பட்டுப்போனது குறித்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லாததையே காட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், மரம் என்பது ஒரு அடையாளம் அல்ல, அதை இருவரும் இணைந்து நட்ட அந்த செயல்தான் ஒரு அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் நிலவும் அதீத வெப்பம் தாங்காமல்தான் அந்த மரம் பட்டுப்போனதாக தெரிவித்துள்ள மேக்ரான், தான் இன்னொரு மரத்தை அமெரிக்காவுக்கு அனுப்பப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்