பிரான்ஸை மிரட்டும் மிகுவல் புயல்.. மீனவர்களை மீட்க சென்ற வீரர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் கடலில் சிக்கி தவித்த மீனவர்களுக்கு உதவி செய்ய சென்ற மீட்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகுவல் புயல் காரணமாக பிரான்சில் குறிப்பிட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களுக்கு உதவ, வட-மேற்கு லா ரொஷெல்லின் , ஸாஸ்ஸ் ஓலோன் துறைமுகத்திலிருந்து மீட்பு படை வீரர்கள் படகில் பயணித்து சென்றுள்ளனர். மீட்பு படை வீரர்கள் சென்ற படகு, புயலில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளது. இதில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த துயர சம்பவம் மூலம் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் மூலம் தினம் தினம் மீட்பு வீரர்கள் கடலில் எதிர்கொள்ளும் அபாயங்களை நினைவூட்டுகிறது என பிரான்ஸ் தேசிய மீட்பு குழுவின் தலைவர் சேவியர் டி லா கோர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்