அமெரிக்க அதிபரின் கையை பதம் பார்த்த பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கைரேகை பதியும் அளவிற்கு அழுத்தி பிடித்துள்ளார்.

ஜூன் 6, 1944 அன்று நாஜிக்களை பிரான்சிலிருந்து வெளியேற்றுவதற்கான கூட்டணி முயற்சியின் போது, 2,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள போர்க்கால கல்லறைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்று காலை பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சேர்ந்து ஒமஹா கடற்கரைக்கு சென்றார்.

அங்கிருந்த வீரர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய இமானுவேல், நாஜிக்களிடம் இருந்து தனது நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களுடைய உயிரை ராணுவ வீரர்கள் பலிகொடுத்ததை பிரான்ஸ் இன்னும் மறக்கவில்லை.

எங்கள் சுதந்திரத்திற்காக உங்களிடம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம். என் தேசத்தின் சார்பாக நான் நன்றி கூறிக்கொள்கிறேன் என பேசினார்.

அதன்பிறகு நடைபெற்ற சந்திப்பின் போது, இமானுவேல் கைகொடுத்ததும் அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சியான முகத்துடன் தன் பார்வையை வேறு பக்கம் மாற்றினார்.

இதற்கான காரணம் முதலில் யாருக்கும் விளங்கவில்லை. இமானுவேலின் கைரேகை ட்ரம்பின் கைகளில் இருப்பதை பார்த்த உடனே அங்கிருந்தவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்