நீண்ட காலம் பிரச்சினை ஏற்படுத்திய உறவினரை பொலிசில் சிக்க வைக்க மெக்கானிக் தீட்டிய சதித்திட்டம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தனது உறவினர் ஒருவருடன் இருந்த நீண்ட கால பகைக்கு பழி தீர்ப்பதற்காக, சதித்திட்டம் தீட்டி அவரை பொலிசில் சிக்க வைக்க முயன்றார் ஒருவர்.

பிரான்சின் Landes பகுதியைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்குக்கு, தனது உறவினர் ஒருவருடன் நீண்ட காலமாக சண்டை இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

அவரை எப்படியாவது பழி தீர்க்க விரும்பிய அந்த மெக்கானிக், ஒரு நாள் தனது வேனில் தனது உறவினரின் நம்பர் பிளேட் போலவே காட்சியளிக்கும் நம்பர் பிளேட்டை பொருத்திக் கொண்டு, வேண்டுமென்றே மிக வேகமாக வேனை செலுத்தியிருக்கிறார்.

வேகக்கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்காக தனக்கு பொலிசாரிடம் இருந்து நோட்டீஸ் வரவே, குழம்பிப்போன மெக்கானிக்கின் உறவினர், தான் அந்த குறிப்பிட்ட நாளில் அந்த பகுதியில் வேனை செலுத்தவே இல்லை என்றும், தன்னால் பல சாட்சியங்களை கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளார்.

பொலிசார் தொடர்ந்து ஆராயும்போது, வேகமாக சென்ற வேனின் புகைப்படத்தில் மெக்கானிக்கின் உருவம் தெரிவதைக் கண்டுள்ளனர்.

பின்னர் முறைப்படி விசாரித்தபோது அந்த மெக்கானிக் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கு 30,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

அத்துடன் அவரது வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்