பிரான்சில் இந்த இடங்களில் சிகரெட் பிடித்தால் அபராதம்... வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் சில பூங்காக்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் பாரிசில் ஒரு வருடத்திற்கு முன்பு ஆறு பூங்காக்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஜுன் 8-ஆம் திகதியில் இருந்து பாரிசில் இருக்கும் மேலும் 52 பூங்காக்களில் புதியநடைமுறைகள் கொண்டுவரப்படவுள்ளன.

நாள் ஒன்றிற்கு 66,000 சிகரெட் துண்டுகள் பரிசின் வீதிகள், பூங்காங்கள் பொது இடங்களில் இருந்து பொறுக்கி எடுக்கப்படுகின்றன. பரிசுக்குள் சிகரெட் துண்டுகள் வீதிகளில் எறியப்பட்டால் €68 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தவிர, புதிய கட்டுப்பாடாக பூங்காக்களில் சிகரெட் பற்றவைத்தால் €38 அபராதம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்