ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்குமுன் பசுமையாகும் ஈபிள் கோபுரம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பாரீஸில் நடக்கவிருக்கும் நிலையில், ஈபிள் கோபுரத்தை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டு பசுமையாக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை வெளியிட்ட பாரீஸ் மேயரான Anne Hidalgo, ஈபிள் கோபுரத்தைச் சுற்றிலும் மாபெரும் தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டு, முன்பு கார்கள் வலம் வந்த சாலைகள் இனி பாதசாரிகள் மட்டுமே நடப்பதற்காக ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரு முனையில் Place Joffre மறு முனையில் Place du Trocadero என இரு முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கிடையில் ஒரு மைல் தொலைவிற்கு பசுமையை மட்டுமே இனி காண முடியும்.

இதற்காக செலவிடப்பட இருக்கும் தொகை 65 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறுக்கும் நெடுக்குமாக செல்லும் சாலைகள் இனி இருபுறமும் மரங்கள் அணி வகுத்து நிற்கும் பசுமைச்சாலைகளாகும்.

திட்டத்தை அறிவித்த மேயர் Anne Hidalgo, அமெரிக்க கட்டிடக் கலைஞர் Kathryn Gustafson இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது திட்டம் குறித்து பேசிய Gustafson, பசுமைச்சூழலை இன்னும் அதிகரிக்கும் வகையில், பாரீஸிலேயே மிகப்பெரிய தோட்டத்தை உருவாக்கப்போகிறோம் என்றார்.

Gustafson பிரான்சில் படித்தவர் என்பதோடு லண்டனில், Hyde Parkஇல், பிரித்தானிய இளவரசி டயானாவின் நினைவிடத்தில் அமைந்திருக்கும் நீரூற்றை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்