ஈபிள் கோபுரத்திற்கெதிரே ஆறாக ஓடிய இரத்தம்: சுவாரஸ்ய பின்னணி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாரீசின் ஈபிள் கோபுரத்துக்கெதிரே அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றின் முன் ஏராளமான இரத்தத்தை சிந்த விட்டு கவனம் ஈர்த்தனர்.

பாரீஸின் ஈபிள் கோபுரத்திற்கெதிரே அமைந்துள்ளது மற்றொரு பிரபல சுற்றுலாஸ்தலமான Trocadero.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேற்று Trocaderoவுக்கு செல்லும் படிக்கட்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதற்காக போலியான இரத்தத்தை ஊற்றி கவனம் ஈர்த்தனர்.

சுற்றுலாப்பயணிகளும் பொலிசாரும் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் கண் முன்பே சமூக ஆர்வலர்கள் சுமார் 300 லிற்றர் இரத்தம் போல் காட்சியளிக்கும் திரவத்தை ஊற்றினர்.

ஆறாவது மாபெரும் பேரழிவை தடுத்து நிறுத்துங்கள், என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள், சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தியபின் படிக்கட்டுகளை சுத்தம் செய்தனர்.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஒன்றில், புவியின் எட்டு மில்லியன் சிற்றினங்களில் ஒரு மில்லியன் சிற்றினங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட இந்த சமூக ஆர்வலர்களின் குழு உலகின் வேகமாக வளரும் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறி வருகிறது.

இந்த குழு, அஹிம்சை வழியில், அரசுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதன் மூலம் அரசுகளை சீதோஷ்ண மற்றும் சுற்றுச்சூழலியல் தொடர்பான மாற்றங்கள் உடனடியாக எடுக்கப்படவேண்டியவை என அறிவிப்பதற்காகவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்காகவும், சிற்றினங்களின் அழிவை தடுத்து நிறுத்துவதற்காகவும் போராடி வருகின்றன.

இந்த குழுவைச் சேர்ந்தவர்கள்தான் உலகின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் ஏராளமானவை வேகமாக அழிந்து வருவதை காட்டுவதற்காக போலியான இரத்தத்தை கொட்டி கவனம் ஈர்த்தவர்கள் ஆவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்