பாரிசில் நாளை பல்வேறு இடங்களில் மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு தடை!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் நாளைய தினம், மஞ்சள் மேலாடை போராட்டத்திற்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நாளை 24வது வார மஞ்சள் மேலாடை போராட்டம் இடம்பெற உள்ளது. இந்த போராட்டம் ஐந்து மாதங்களை கடந்துள்ளது. இந்நிலையில், பாரிசுக்குள் சோம்ப்ஸ்-எலிசேயில் போராட்டம் நடத்த இந்த வாரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோம்ப்ஸ்-எலிசேயில் நாளை காலை 6 மணிமுதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும், நோர்து-டாம் தேவாலயத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயம் தீ விபத்துக்குள்ளான பத்து நாட்களில், இரண்டாவது வாரமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்கள் தவிர Presidence de la Republique மற்றும் I'Assemblee nationale ஆகிய அரச தளங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்