இதுதான் உண்மையான பிரெக்சிட், தெரிந்து கொள்ளுங்கள்: பிரான்சை விட்டு வெளியேற்றப்படும் பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டின் விளைவாக 30 நாட்களுக்குள் கணவன் மற்றும் இரண்டு சிறு குழந்தைகளுடன் பிரான்சை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ள ஒரு பெண்ணின் நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

பிரான்சின் Languedocஇல் வசிக்கும் Emma Lawrence, பேஸ்புக் வீடியோ ஒன்றில் இதுதான் பிரெக்சிட், அது வேலைகளைத் தக்கவைத்துக் கொள்வது முதலான விடயங்களைக் குறித்தது அல்ல, போலந்து மற்றும் ஹங்கேரி நாட்டவர்களுக்கு நடப்பதைப்போல இது பிரித்தானியர்களுக்கும் நடக்கிறது என்கிறார்.

அதற்கான உதாரணம் நான்தான் என்று Emma கூறும் அந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நீங்கள் இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கு வந்து வாழும்போது, நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஐரோப்பிய கண்டத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அதைத்தான் இவ்வளவு நாளும் செய்து வந்தோம் என்கிறார் Emma.

பிரெக்சிட்டுக்கு வாக்களித்த ஒரு உறவினர், உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது, நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கூறியதாக தெரிவிக்கும் Emma, உண்மை என்னவென்றால், நாங்கள் இப்போது நன்றாக இல்லை என்கிறார்.

பிரித்தானியாவில் நல்ல பணியில் இருந்த Emma, இரண்டாண்டுகளுக்குமுன் குடும்பத்துடன் பிரான்ஸ் வந்ததாகவும், நிலம் வாங்கி வீடு கட்டும் திட்டத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வீடு தேடுவது என பிஸியாக இருந்ததால் நிரந்தர வருவாயை இன்னும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்கிறார் Emma.

அதனால் தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாழிட நிபந்தனைகளுக்குள் வராததால், வாழிட உரிம அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறும் Emma, தாங்கள் பயந்தபடியே தங்களுக்கு சில கடிதங்கள் வந்துள்ளதாகத் தெரிவிகிறார்.

அந்த கடிதங்களில் தாங்கள் இன்னும் 30 நட்களுக்குள் பிரான்சை விட்டு வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Emma.

தங்களைப் போலவே பலருக்கு இதேபோல் நடந்துள்ளதால் மிகுந்த மன உளைச்சலிலும் அதிர்ச்சியிலும் இருப்பதாக தெரிவிக்கும் Emma, பிரெக்சிட்டுக்கு வாக்களித்த பலரும், இப்படி நடக்கும் என்பது தங்களுக்கு தெரியாது என்றார்கள், இப்போது தெரிந்து கொள்ளட்டும், இதுதான் உண்மை, இதுதான் பிரெக்சிட் என்கிறார்.

என்றாலும் Emmaவுக்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்