மார்பக அழகு சிகிச்சை செய்தோருக்கு அரிய வகை புற்றுநோய்: பிரான்ஸ் அரசு அதிரடி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மார்பகத்தை பெரிதாக்கும் அழகு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இம்ப்ளாண்ட் ஒன்று, அரியவகை புற்றுநோயை உண்டாக்குவதாக தெரியவந்துள்ளதையடுத்து அந்த இம்ப்ளாண்டுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.

இத்தகைய இம்ப்ளாண்டுகளுக்கு தடை விதிக்கும் முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.

அந்த இம்ப்ளாண்டுகள் அதை பயன்படுத்துபவரின் நோயெதிர்ப்பு சக்தியை தாக்கும் ஒரு அரிய வகை புற்றுநோயை உண்டாக்குவது தெரியவந்துள்ளது.

பிரான்சில் மார்பக அழகு சிகிச்சை செய்து கொண்ட 400,000 பெண்களில் சுமார் 70,000 பேர் இந்த இம்ப்ளாண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்சில் இந்த இம்ப்ளாண்டுகளை பயன்படுத்தியோரில் 59 பேருக்கு அந்த அரியவகை புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும் பிரான்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்