பிரான்சில் இரண்டு ஆண்டுகளுக்கு துரித உணவுகளுக்கு தடை? காரணம் இதுதான்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் விற்பனையாகும் துரித உணவுகளில் 50 சதவிதம் வீணடிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டன. ஆனால், இதனை தடுக்க குறித்த நிறுவனங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குறித்த நிறுவனங்களுக்குள் எவ்வித இணக்கமும் இல்லை என்றும், இவற்றில் Domino's, Exki, Subway மற்றும் Five Guys போன்ற மிக புகழ்பெற்ற நிறுவனங்களும் இதில் அடங்கும் என்றும் அந்நாட்டின் சூழலியல் அமைச்சகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகம் குற்றஞ்சாட்டின.

அத்துடன் கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 50 தடவைகளுக்கும் மேல், இந்த நிறுவனங்கள் மீது அரசு தரப்பில் இருந்து சோதனை நடவடிக்கை நடந்தது. இந்நிலையில், உணவு வீணடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான எந்த ஒழுங்கற்ற திட்டங்களும் இவர்களிடம் இல்லை என்றும், 75 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு துரித உணவு நிறுவனங்களுக்கு விற்பனை தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers