பிரான்சில் அதிவேகமாக சென்றதால் நின்று போன இளைஞரின் திருமணம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் தனது வாகனத்தில் அதிவேகமாக பயணித்ததால், இளைஞர் ஒருவரின் திருமணம் நின்ற சம்பவம் நடந்துள்ளது.

21 வயது இளைஞர் ஒருவர் லியோன் நகரில் இருந்து Grenoble நகருக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு நேற்று மாலை திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக தனது வாகனத்தில் அதிவேகமாக அவர் பயணித்துள்ளார். அவர் பயணித்த A41 சாலையில் 110 கிலோ மீற்றர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.

ஆனால், குறித்த இளைஞர் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மணிக்கு 213 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிசார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.

Saint-Quentin-Fallavier நகரில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், தனது திருமணத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்ததாக கூறியதை பொலிசார் ஏற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, அவரது அனுமதி பத்திரத்தை ரத்து செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக குறித்த இளைஞரின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்