பிரான்சில் திருடுபோன பிகாசோ ஓவியம்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் திருடப்பட்ட பிகாசோ ஓவியம், 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது.

கடந்த 1938ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை தீட்டினார்.

புகழ்பெற்ற இந்த ஓவியத்தை சவுதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் வாங்கி, பாதுகாத்து வந்தார். கடந்த 1999ஆம் ஆண்டு அவர் தனது சொகுசு கப்பல் மூலம் பிரான்ஸ் சென்றுள்ளார்.

அங்கு மர்ம நபர்கள் சிலர் அவரிடம் இருந்து பிகாசோவின் ஓவியத்தை திருடி சென்றுவிட்டனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஓவியம் தற்போது கிடைத்துள்ளது.

AP/AAP

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டமைச் சேர்ந்த கலை துப்பறிவாளரான ஆர்தர் பிராண்ட் என்பவர், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பிகாசோவின் ஓவியத்தை மீட்டுள்ளார்.

இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு 28 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.193 கோடி) என ஆர்தர் பிராண்ட் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த ஓவியம் தன் கைக்கு வருவதற்கு முன் கள்ளச்சந்தை மூலமாக 10க்கும் மேற்பட்டோரிடம் கை மாறி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers