பிரான்சில் அகதிகள் சந்திக்கும் துன்பங்கள்! நேரில் சென்று பார்த்த முதல்வர் கவலை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கூடாரங்களிற்குள் இருக்கும் அகதிகளை பாரிசின் மாநகரபிதா அன் இதால் கோ நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் வடகிழக்குப் பகுதியில், கூடாரங்களிற்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள், மிகவும் மோசமான நிலையில், வெறும் கூடாரங்களிற்குள் தூங்குவதாகவும், சிலர் தெருவில் தூங்குவதாகவும், மாநகர முதல்வர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அன் இதால்கோ, இவர்களிற்கான முறையான தங்குமிடம் வழங்கப்படும் வரை, தான் இந்த அகதிகளை வாராவாரம் தொடர்ந்து சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்