திருமணமான பெண் வெளியிட்ட நிர்வாணப்படங்கள்: பிரான்ஸ் மேயரின் பதவிக்கு உலை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
177Shares

தனக்கு நிர்வாணப்படங்களை அனுப்பியதாக பிரான்ஸ் மேயர் மீது புகார் தெரிவித்திருந்த திருமணமான பெண் ஒருவர், அந்த படங்களை வெளியிட்டதையடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப்புக்கு நெருக்கமானவரான மேயர் Luc Lemonnier (50) பல பெண்களுக்கு நிர்வாணப்படங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சோபியா என்ற பெண் அவர் அனுப்பியதாக கூறப்படும் புகைப்படங்களை வெளியிட்டதையடுத்து அவர் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டார்.

Lemonnierஇன் வீட்டினருகே நீண்ட காலமாக வசித்து வருபவர் Elisa. இருவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள் என்பதால் இரு குடும்பங்களுக்கும் நல்ல பரிச்சயம் இருந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் Lemonnier தனது நான்கு நிர்வாணப்படங்களை Elisaவுக்கு அனுப்பி, தான் எதற்கும் தயாராக இருப்பதாக ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறார்.

திருமணமான Sophiaவுக்கும் தொடர்ந்து நிர்வாணப்படங்களை அனுப்பியிருக்கிறார் Lemonnier.

தனக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன என்றும் தான் திருப்தியான தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், இப்படிப்பட்ட அதிகப்படியான விடயங்கள் தனக்கு தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார் Sophia.

எவ்வளவோ எடுத்துக் கூறியும் Lemonnier கேட்காமல் தொடர்ந்து ஏராளமான நிர்வாணப்படங்களை Sophiaவுக்கு அனுப்ப, ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன Sophia, அந்த படங்களை மற்ற கவுன்சிலர்களுக்கு அனுப்பி விட்டார்.

பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றும், பெரிய அளவில் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படாத நிலையில், இப்போது ஏன் திடீரென Lemonnier ராஜினாமா செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த இரண்டு பெண்கள் தவிர, Mikaëla என்ற ஒரு பெண்ணும், தனது மகன் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்ட நிலையில் Lemonnierஇடம் உதவி கோர, அவருக்கும் Lemonnier ஆபாச செய்திகளும் நிர்வாண புகைப்படங்களும் அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் இதுபோன்ற புகார்கள் வெளிவரலாம் என்பதாலேயே இப்போது அவசர அவசரமாக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த செய்திகளும் படங்களும் யாருக்கும் கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டவை அல்ல என்றும், வயது வந்தவர்கள் ஒருவருக்கொருவர் சம்மதத்தின் பேரிலேயே பகிர்ந்து கொண்டவைதான் அவை என்றும் கூறியுள்ளார் Lemonnier.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்