ஓரினச்சேர்க்கையாளர்களின் இணையதளத்தில் நிர்வாணப்படங்களை பகிர்ந்த இளம்பெண் தலைமறைவு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இணையதளம் ஒன்றில் நிர்வாணப்படங்களை பகிர்ந்து கொண்டது உட்பட பல குற்றங்கள் செய்த ஒரு இளம்பெண் லண்டன் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராக வேண்டிய நேரத்தில் பிரான்சுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

ஆண்களுக்கான இணையதளம் ஒன்றில் தன்னை ஆண் என அறிமுகம் செய்து கொண்ட பிரான்சைச் சேர்ந்த Yannick Glaudin (30), சட்ட விரோதமாக சிலரை பின் தொடர்ந்ததோடு, நிர்வாணப்படங்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

பிரித்தானியாவில் லண்டன் நீதிமன்றம் ஒன்றில் அவர் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவர் தன் சொந்த நாடான பிரான்சுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

ஏற்கனவே பிரான்சில் அரசியல் சூழல் பிரச்சினைக்குரியதாக இருக்கும் நிலையில், அவரை உங்களால் கைது செய்ய முடியுமா என நீதிபதி சந்தேகம் எழுப்பினார்.

அவருக்கு பதிலளித்த அதிகாரிகள், அவர் எங்கே தலை மறைவாக இருக்கிறார் என தங்களுக்கு தெரியும் என்றும், அவரை பிரான்ஸ் சென்று கைது செய்வதற்காக ஐரோப்பிய கைது வாரண்ட் ஒன்றை பெறும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்