பிரான்சில் மீண்டும் தீவிரமடையும் வன்முறை: அரசு அதிரடி நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளதையடுத்து, அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை போராட்டக்காரர்கள் பாரீஸின் புகழ் பெற்ற Champs-Élysées பகுதியில் அமைந்துள்ள கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.

அன்று நடந்த போராட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டார்கள், முந்தைய பேரணிகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

எரிபொருள் வரி உயர்வை எதிர்த்து நான்கு மாதங்களுக்கு முன் பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு எதிரான போராட்டமாகவே மாறிப்போனது.

இந்நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் பிரதமர் Philippe, அடுத்த சனிக்கிழமையிலிருந்து மஞ்சள் மேலாடை பேரணிகள் தடை செய்யப்படும் என்றார். இது பாரீசுக்கு மட்டுமின்றி மற்ற நகரங்களுக்கும் பொருந்தும் என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய Philippe, போராட்டக்காரர்களை நடத்தும் விதம் குறித்து தவறான அறிவுறுத்தல்கள் பொலிசாருக்கு மேலதிகாரியிடமிருந்து கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையொட்டி, பொலிஸ் துறை தலைவரான Michel Delpuech மாற்றப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

REUTERS

அவருக்கு பதிலாக Didier Lallement, பொலிஸ் துறை தலைவராக பொறுப்பேற்கிறார். இதற்கிடையில், விடுமுறையில் இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், விடுமுறையை ரத்து செய்துள்ளார்.

மஞ்சள் மேலாடை வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இது போதும் என்று கூறிய மேக்ரான், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது, குறிப்பாக Champs-Élysées பகுதியில் என்றார்.

AFP
REUTERS
AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்