பிரான்சில் கலவரத்தின் போது திருட்டு செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி! வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பொலிசார் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிரான்சில் மஞ்சள் மேலாடைப் போராளிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த சமயத்தில் கலவரக்காரர்கள், பலர் அங்கிருந்த கடைகளை உடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த பொருட்கள் களவாடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த கலவர சம்பவம் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட போது, அங்கிருந்த PSG உதைபந்தாட்டக் கழகத்தின் கடையும் உடைக்கப்பட்டது.

அதன் பின் அந்த கடையில் இருந்த PSG டீசேர்ட்கள் பலவற்றை எடுத்துவந்த காவல் துறை அதிகாரி ஒருவர், கருப்பு நிற பை ஒன்றில் ஒளித்து வைக்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக IPGN தன்னுடைய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது காவல்துறைக்கே அவமானமான செயல் எனப் பல விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்