பிரான்சில் வீட்டை விட்டு வெளியேறிய மன நலம் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் பத்திரமாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளான்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் boissy-saint-léger பகுதியில் இருக்கும் வீட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன், கடந்த ஞாயிற்று கிழமை தன்னுடைய தாய்க்கு தெரியாமல் ஆடைகள் அணிந்து கொண்டு, வீட்டின் சாவியை எடுத்து திறந்து வெளியேறியுள்ளார்.
கடும் குளிரில் அதற்கான ஆடைகள் இன்றி வெகு தூரம் நடந்து சென்ற சிறுவன், அதன் பின் இரயிலில் RER- சில தூரம் பயணித்துள்ளான்.
வீட்டில் இருந்து வெளியேறி வெகு நேரமாகியும் மகன் வராததால் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பாரிசின் 15 ஆம் வட்டாரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் சுமார் 20 கி.மீற்றர் வரை பயணித்துள்ளான். மருத்துவமனை பரிசோதனை செய்ததில் அவன் ஆரோக்கியமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் அந்த சிறுவனின் தாய் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் என தெரிந்தும் பெற்றோர் அஜாக்கிரதையாக இருந்ததால், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.