கோழிகளைக் கொல்லும் நரி தெரியும்! நரியைக் கொல்லும் கோழிகளைப் பார்த்திருக்கிறீர்களா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வேளாண்மை பள்ளி ஒன்றில் பயின்று வரும் மாணவர்கள் சிலர், கோழிப்பண்ணையில் ஒரு நரி இறந்து கிடப்பதைக் கண்டனர்.

கோழிகளைக் கொல்வதற்காக மாலையில் திருட்டுத்தனமாக கோழிக்கூட்டிற்குள் சென்று பதுங்கியிருக்கிறது அந்த நரி.

இரவில் சொகுசாக கோழி வேட்டை நடத்தலாம் என்று எண்ணியிருந்த நரிக்கு, தனக்கு ஏற்படப்போகும் ஆபத்து நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மறுநாள் காலை கோழிக்கூண்டிற்குள் நரி இறந்து கிடப்பதை மாணவர்கள் கண்டிருக்கிறார்கள்.

தங்கள் அலகுகளால் கொத்தியே நரியை கோழிகள் கொன்றிருக்கும் என நம்புகிறார்கள் பிரான்சின் பிரிட்டனியிலிருக்கும் அந்த வேளாண்மை பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும்.

அவர்கள் நம்புவதற்கும் காரணம் இருக்கிறது, ஏனென்றால், 2010ஆம் ஆண்டு, பிரித்தானியாவில் Izzy, Pongo மற்றும் Pecky என்ற மூன்று கோழிகள், ஒரு பெரிய சேவலின் உதவியோடு தங்கள் கூட்டில் நுழைந்த ஒரு நரியை காலி பண்ணி விட்டன, அதுவும் சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers