மேக்ரான் இடத்தைப் பிடிக்கப்போவது இவர்தானா? மேக்ரானுக்கு ரொம்ப வேண்டியவராம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இமானுவல் மேக்ரானைக் குறித்து வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதிய ஒரு நபர்தான் அவரது இடத்தைப் பிடிக்கப்போகிறார் என பிரான்சில் பேச்சு அடிபடத் தொடங்கியிருக்கிறது.

வரும் தேர்தலில் மேக்ரானைத் தோற்கடித்து பிரான்சின் அடுத்த ஜனாதிபதியாக ஆவார் என கணிக்கப்படும் Francois Ruffin (43) மேக்ரானைக் குறித்து எழுதிய வாழ்க்கை வரலாறு புத்தகம், உண்மையில் அவரை புகழ்ந்து எழுதப்பட்டதல்ல.

மோசமான அரசியல் அமைப்பு, தவறுதலாக அதன் வங்கியாளர் ஒருவரை ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி விட்டதாக சாடுகிறார் அவர்.

தனிப்பட்ட முறையிலும் மேக்ரானை தாக்கி எழுதப்பட்ட அந்த புத்தகம் ஒரு வெறுப்பைச் சொல்லுவதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்று விமர்சித்திருந்தது.

மஞ்சள் மேலாடை போராட்டங்களால் ஆட்டம் கண்டுள்ள மேக்ரானின் நாற்காலியில் இனி Ruffinதான் அமருவார் என ஆருடம் கூற ஆரம்பித்து விட்டார்கள் பலர்.

திரைப்பட தயாரிப்பு துறையில் பிரபலமானவரான Ruffin, மேக்ரான் படித்த அதே பள்ளியில் படித்தவர், ஆனால் அவரைவிட மூன்று வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers