மஞ்சள் மேலாடை போராட்டத்தில் 13 ஆயிரம் தடவைகள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 13,000 தடவைகள் LBD துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் இந்த போராட்டம் வலுபெற்று வருகிறது. வன்முறை சம்பவங்களும் இந்த போராட்டத்தில் நடக்கின்றன.

கலவரங்கள் ஏற்படும்போது பொலிசார் ரப்பர் குண்டுகள் கொண்ட LBD துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை நடந்த மஞ்சள் மேலாடை போராட்டத்தில் 13, 095 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 2,200 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு காரணமாக பொலிசார் மீது 83 வழக்குகளை IGPN மற்றும் IGGN அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை நடத்தப்பட்ட 13, 095 துப்பாக்கிச்சூடுகளில் 206 துப்பாக்கிச் சூடுகள் தலையை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் கலவரங்களை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதற்கு எதிராக பல வாத விவாதங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers