பிரான்சில் காரில் வந்த பயணியை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய டிரைவர்! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மான்செஸ்டர் யூனைடெட் அணியின் வெற்றியை கொண்டாடிய நபரை கார் டிரைவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று Paris Saint-Germain F.C அணிக்கும் Manchester United-க்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.

இதில் Manchester United அணி 3-1 என்று வெற்றி பெற்றதால் வாடகை காரில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் வெற்றியை கொண்டாடும் விதமாக காரில் உள்ளே இருந்த படி விசில் அடித்துக் கொண்டு எல்லையற்ற மகிழ்ச்சியில் பாடல் பாடியுள்ளார்.

ஆனால் அந்த காரின் டிரைவர் PSG அணியின் ஆதரவாளர் என்பதால், அவருக்கு கோபம் வர, குறித்த பயணியை மிக மோசமாக தாக்கியுள்ளார்.

கத்தி ஒன்றின் மூலம் அவரை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த பயணி அருகிலிருக்கும் Georges Pompidou European மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அந்த டிரைவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers