பிரான்சின் நெருக்கடியை இம்மானுவல் மேக்ரான் புரிந்துகொள்ளவில்லை: கருத்துக்கணிப்பு தகவல்!

Report Print Kabilan in பிரான்ஸ்

மஞ்சள் மேலாடை போராட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடிகளை ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் புரிந்துகொள்ளவில்லை என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க பொலிசார் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

தண்ணீரை பீய்ச்சியடித்து ஆங்காங்கே போராளிகளை பொலிசார் விரட்டியடித்து வருகின்றனர். இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட 1,004 பேரிடம் பிப்ரவரி 19, 20 ஆகிய திகதிகளில் இந்த செல்வாக்கு மற்றும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகின.

இந்த கருத்துக்கணிப்பின் படி, மஞ்சள் மேலாடை போராட்டத்தின் நெருக்கடிகளை மேக்ரான் புரிந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேக்ரான் செல்வாக்கு மெல்ல மெல்ல உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, வெளியாகியுள்ள இந்த கருத்துக்கணிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், மேக்ரானின் செல்வாக்கும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில், தற்போது மேக்ரானின் செல்வாக்கு 5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன்மூலம், 28 புள்ளிகள் செல்வாக்குடன் மேக்ரான் உள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers