பொலிசார் மீது மலம் நிரம்பிய குண்டுகளை வீசிய மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தொடரும் மஞ்சள் மேலாடை போராட்டங்களின் ஒரு பகுதியாக பொலிசார் வித்தியாசமான ஒரு தாக்குதலுக்கு ஆளாகினர்.

போராட்டக்காரர்கள் பொலிசார் மீது மனித மலம் நிரப்பிய பைகளை குண்டுகள் போல்வீசி தாக்கினர்.

சனிக்கிழமை நடந்த மஞ்சள் மேலாடை போராட்டங்களின்போது, பொலிசார் மீது மலம் நிரம்பிய பைகள் வீசப்பட்டு அவை வெடிக்கச் செய்யப்பட்டன, மூன்று பொலிசார் உடல் முழுவதும் மலம் தெறிக்க, அசௌகரியமான சூழலுக்கு உள்ளாகினர் என பொலிஸ் யூனியன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வீசப்பட்ட மல குண்டு தாக்கியதில் ஒரு பொலிசாருக்கு முழங்கையில் காயமும் ஏற்பட்டது.

சனிக்கிழமைக்கு முன்பே சமூக ஊடகங்களில் மலம் வீசும் திட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

1000 போராட்டக்காரர்கள் முன்பு பொலிசார் அவமானத்துக்குள்ளாக்கபட்டதாக பொலிஸ் யூனியன் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்