நடுவர்களை விலைக்கு வாங்க முயற்சித்தோம்! பிரான்ஸ் கால்பந்து மோசடி தொடர்பில் ஒரு அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகமே உற்று நோக்கிய பிரான்ஸ் கால்பந்து மோசடி தொடர்பில் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் கால்பந்து லஞ்ச மோசடி என்பது Valenciennes மற்றும் Olympique de Marseille அணிகளுக்கிடையே 1992 - 93 காலகட்டத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது நடந்த ஒரு ஊழலாகும்.

Marseille அணியின் உரிமையாளரான Bernard Tapie மற்றும் அந்த அணியின் மேனேஜரான Jean-Pierre Bernès ஆகிய இருவரும், Valenciennes அணியின் விளையாட்டு வீரர்களான Jorge Burruchaga, Jean-Jacques Eydelie மற்றும் Christophe Robert ஆகியோருக்கு சரியாக விளையாடாமல் இருப்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றனர்.

Jacques Glassmann லஞ்சம் பெற மறுத்ததோடு, ஊழலை வெளிக்கொண்டு வந்தார். அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்த ஊழல் தொடர்பாக Bernard Tapieயின் உதவியாளராக இருந்த Marc Fratani, வாக்குமூலம் ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில் Marc, Tapie எந்த எல்லைக்கும் போகக்கூடியவர் என்றும், அதனால், ஒரு நடுவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் தானும் பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்னொரு குற்றமும் செய்தோம் என்று கூறும் Marc, அந்த விளையாட்டில், எதிரணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு Haldol என்ற மருந்தை அவர்களுக்கு தெரியாமல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மன நலப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் அந்த மருந்தை எதிரணியினர் பயன் படுத்தும் அனைத்து பானங்களிலும் மெல்லிய ஊசி மூலம் சேர்த்ததாகவும் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார் Marc.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்