விமானத்தில் பெண் பயணி அருகில் உட்கார்ந்த ஆண் பயணி செய்த முகம் சுழிக்கும் செயல்: புகைப்படங்கள் வெளியானது

Report Print Raju Raju in பிரான்ஸ்

பறக்கும் விமானத்தில் பெண் அருகில் உட்கார்ந்திருந்த ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட், ஷூக்களை கழட்டி விட்டு உட்கார்ந்த புகைப்படங்களை பெண் பயணி வெளியிட்டுள்ளார்.

Air France விமானத்தில் பயணம் செய்த லிசி தாம்சன் என்ற இளம்பெண், பயணத்தின் போது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

அதில், என் அருகில் உட்கார்ந்த ஆண் பயணி விமானம் கிளம்பியவுடன் முதலில் தனது பேண்ட்டை கழட்டினார்.

பின்னர் தனது ஷூக்கள் மற்றும் சாக்ஸையும் அவர் கழட்டினார்.

ஆனால் இதை விமான ஊழியர்கள் கண்டுகொள்ளவேயில்லை.

இதன்பின்னர் வேறு நபரை கத்தி அழைத்த அந்த பயணி என்னுடன் வந்து உட்கார், நாம் பாடல்கள் கேட்கலாம் என கூறினார்.

அவர் அமெரிக்காவை சேர்ந்தவரா அல்லது பிரான்ஸை சேர்ந்தவரா என எனக்கு தெரியவில்லை.

இதன்பின்னர் விமானம் தரையிறங்கும் போது தான், தனது பேண்ட்டை அவர் அணிந்து கொண்டார்.

அவர் அரை நிர்வாணமாக விமானத்தில் பயணித்தது மோசமாக இருந்தது என கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள விமான நிறுவனம், லிசாவுக்கு வேறு இருக்கை கொடுக்க ஊழியர்கள் முன்வந்தனர்.

ஆனால் அவர் அதை இறுதிவரை ஏற்காமல் அங்கேயே தான் உட்கார்ந்திருந்தார் என தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers