பிரான்சில் தனது உற்பத்தியை நிறுத்திய Nutella நிறுவனம்: தர குறைபாடு காரணமாம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரபல நிறுவனமான நியூடெல்லா பிரான்சிலுள்ள தனது தொழிற்சாலையின் உற்பத்தியை நிறுத்தி உள்ளது.

ரொட்டியில் ஜாமுக்கு பதிலாக தடவி உண்ணப்படும் சாக்லேட் கலந்த நியூடெல்லா ஸ்ப்ரெட் என்னும் பொருள் உலகப் புகழ் பெற்றது.

உலகம் முழுவதிலும் அதன் சுவைக்கு பலர் அடிமை என்றே சொல்லலாம். இந்நிலையில் இத்தாலிய நிறுவனமான நியூடெல்லா வட பிரான்சின் Villers-Ecalles பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையின் தயாரிப்பை நிறுத்தியுள்ளது.

தொழிற்சாலையின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், நியூடெல்லா ஸ்ப்ரெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த பொருள் தங்கள் தரத்திற்கு ஏற்றதாக இல்லாததையடுத்து தற்காலிகமாக இந்த உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே சந்தையில் இருக்கும் பொருட்கள் குறித்து அச்சம் எதுவும் தேவையில்லை என்றும், நுகர்வோர் எந்த தடையுமின்றி அவற்றை வாங்கி பயன்படுத்தலாம் என்றும் நியூடெல்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்