பிரான்ஸ் மக்களை காப்பாற்றிய ஹீரோக்களுக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்! பெருமிதம் கொள்ளும் இமானுவேல் மேக்ரான்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தீவிரவாதி நடத்திய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்த மக்களை காப்பாற்றிய மூன்று அமெரிக்கர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் Amsterdam-விலிருந்து பிரான்ஸ் தலைநகர் பிரான்சிற்கு சென்ற பயணிகள் ரயில் ஒன்றில் கடந்த 2015-ஆம் ஆண்டு மோரோக்கோவைச் சேர்ந்த Ayoub El-Khazzani என்ற தீவிரவாதி, அங்கிருந்த பயணிகளை நோக்கி துப்பாக்கியால கண்மூடித்தனமாக சுட்டான்.

அப்போது அந்த இரயிலில் இருந்த மூன்று பயணிகள் தங்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல், அவனுடைய துப்பாக்கியை மடக்கி பிடித்து கீழே தள்ளி பயணிகளை காப்பாற்றினர்.

அவனிடம் பயங்கர ஆயுதங்களான கத்தி, கட்டர் போன்றவைகள் இருந்தது. அந்த இளைஞர்கள் மட்டும் அப்படி துணிச்சலாக செயல்படவில்லை எனில் 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு நேர்ந்திருக்கும்.

100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Sacramento-வில் நடைபெற்றது.

இதில் மக்களை காப்பாற்றிய Anthony Sadler, Alek Skarlatos மற்றும் Spencer Stone-க்கு நாட்டி குடியுரிமைக்கான விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது.

இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரான் தெரிவிக்கையில், உங்களை வரவேற்பதில் பிரான்ஸ் பெருமையடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விழாவில் பிரான்சின் San Francisco ஜெனரல் Emmanuel Lebrun-Damiens மற்றும் சில பிரான்ஸ் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers