ஐயோ என் கண்ணு போச்சு.. மஞ்சள் மேலங்கி போராட்டக்காரருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் நடந்து வரும் மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியதில் அவரது கண் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர் ஜெரோம் ரோட்ரிகஸ் என்பவர் பாரிசில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அப்பகுதியை ரோட்ரிகஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பொலிசார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தினர். அதனால் சிலர் சிதறி ஓடினர். இந்நிலையில் ரோட்ரிகஸின் மீது குண்டு போன்ற ஒன்று தாக்கியதில், அவரது நிலைதடுமாறி தரையில் விழுந்தார்.

பின்னர் தான் அவரது வலது கண்ணில் பலமாக அடிபட்டதால் ரத்தம் வழிந்தது தெரிய வந்தது. உடனே அங்கிருந்தவர்கள் ரோட்ரிகஸுக்கு முதலுதவி அளித்தனர். அப்போது அவர் என் கண்ணை இழந்து விடுவேன் என்று வலியில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனது கண்ணில் அடிபட்டு வீக்கியுள்ளதை புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் ரோட்ரிகஸ் வெளியிட்டுள்ளார்.

மேலும், அவர் காயமடைந்து தரையில் விழுந்தபோது புலம்பிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

AFP/Zakaria Abdelkafi

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்