பிரான்சில் வலுவிழக்கும் மஞ்சள் மேலங்கி போராட்டம்! 69 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் 69,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மீதான வரி உயர்வை கண்டித்து பிரான்சில் நடக்கும் மஞ்சள் மேலங்கி போராட்டம் 11வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 84,000 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் 69,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்ததாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Reuters

பாரிசில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 4,000 பேர் கலந்துகொண்டனர். குறிப்பாக, Place de la Republique-யில் மஞ்சள் மேலங்கி போராளிகள் கூடியிருந்த போதிலும் அங்கு வன்முறை எதுவும் நிகழவில்லை.

எனினும் பொலிசார் அவர்களை வெளியேற்றினர். அதே சமயம் மஞ்சள் மேலங்கி போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களின் முக்கியமானவரான Maxime Nicolle-ஐ, பொலிசார் Bordeaux நகரில் கைது செய்து வைத்திருந்தனர்.

அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். சில இடங்களில் நேற்றைய தினம் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் Christophe Castaner கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP/Getty Images
AFP/Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்