தமிழ் பெண்ணை திருமணம் செய்த பிரான்ஸ் நாட்டு நபர் எடுத்த விபரீத முடிவு! விசாரணையில் வெளிவந்த தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வேலை பார்த்து குடியுரிமை பெற்றிருந்த இளைஞர் திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவரின் பிணம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு விரைந்து வந்த பொலிசார் அந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின் இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் அதே பகுதியின் உப்பளம் தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ஜாய் ஜூலியா (33) என்பதும் தெரியவந்துள்ளது.

பிரான்சில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த இவர், பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தார்.

இதையடுத்து தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்த சில நாட்களிலே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் கடும் விரக்தியில் இருந்த ஜூலியா தற்கொலை செய்ய முடிவு செய்து சம்பவ தினத்தன்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்