பாரிசில் நிலவும் கடும் பனிப்பொழிவு! மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நகரங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில வீதிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் கோபுரம் இன்று காலை முதல் மூடப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிசில் 2-யில் இருந்து 5 சென்டி மீற்றர் வரையான பனிப்பொழிவு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக Meteo France அறிவித்துள்ளது.

N118 நெடுஞ்சாலையும் காலை முதல் தடைப்பட்டுள்ளதால், செம்மஞ்சள் எச்சரிக்கை புதன்கிழமை காலை வரை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈஃபிள் கோபுரம் திறக்கப்படும் நேரம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்