காதுக்குள் ஒலித்த குரல், கூட்டத்துக்குள் காரை செலுத்திய நபர்: உயிருக்கு போராடும் மாணவர்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மாணவர்கள் சாலையைக் கடக்கும்போது மாணவர் கூட்டத்திற்குள் ஒருவர் வேண்டுமென்றே காரை செலுத்தியதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரான்சின் Toulouse பகுதிக்கருகில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றிலிருந்து மாணவர்கள் வெளியேறும்போது, அவர்கள் மீது வேண்டுமென்றே காரை செலுத்திய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அந்த 28 வயது நபர் பொலிசாருக்கு முன்பே தெரிந்தவர் என்றும், ஆனால் பொலிசாரால் கண்காணிக்கப்படுபவர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

அந்த நபரின் காதுக்குள் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருப்பதாகவும், யாரையாவது தாக்க வேண்டும் என அந்த குரல்கள் கூறியதையடுத்தே தான் மாணவர்கள் மீது காரை மோதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜர்னலிசம், கணினி அறிவியல், ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தகம் முதலான பல முதுகலைப் பிரிவுகளைக் கொண்ட அந்த கல்லூரியில் பயின்ற மாணவர்களே இந்த தாக்குதலில் சிக்கியவர்கள்.

சீன மாணவர்களாகிய அந்த மூவரில் ஒருவர் 22 வயது ஆண், இருவர் 23 வயது பெண்கள் ஆவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers