பாரிஸ் வெடி விபத்தில் மக்களை காக்க உயிர் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்கள்: யார் இவர்கள்?

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்று உயிர் தியாகம் செய்த வீரர்கள் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

பாரிசின் Rue de Trevise மற்றும் Saint-Cecile வீதியில் இருக்கும் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 37 பேர் காயமடைந்தனர். தீயை அணைக்க 200 தீயணைப்பு வீரர்களும், நூறு பொலிசாரும் களத்தில் போராடினர்.

மக்களை காப்பாற்ற போராடிய தீயணைப்பு வீரர்களான Nathanael Josselin(27), Simon Cartannaz(28) ஆகிய இருவரும் பலியாகினர். இவர்கள் இருவரும் Chateau d'Eau-யில் பணியாற்றிய வீரர்கள் ஆவர்.

Entremont-le-Vieux நகரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் Nathanael Josselin, தீயணைப்பின் போது இயந்திரத்தை இயக்கும் பணியினை மேற்கொண்டிருந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த பணிக்கு சேர்ந்தார்.

இவர் மிகவும் திறமைசாலியாகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் உயிர் நீத்த மற்றொரு வீரரான Simon Cartannaz, 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த பணியில் சேர்ந்துள்ளார்.

இவரும் Entremont-le-Vieux-யில் தன்னார்வ தீயணைப்பு வீரராக கடமையாற்றியிருந்தார் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மக்களை காப்பாற்ற தீயணைப்பு பணியில் ஈடுபட்ட வீரர் ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தார்.

பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு, உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers