பிரான்சில் 30 அடி உயர கேபிள் காரிலிருந்து விழுந்த பிரித்தானியர் பலி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தனது தோழியுடன் சுற்றுலா சென்ற ஒரு பிரித்தானியர், ஆல்ப்ஸ் மலைப் பகுதியில், 30 அடி உயர கேபிள் காரிலிருந்து விழுந்து பலியானார்.

அவர் மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த 65 வயது முதியவர், 30 அடி உயரத்திலிருந்து விழுவதற்கு முன்னரே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா, அல்லது விழுந்த பிறகு ஏற்பட்டதா என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று 12.20 மணியளவில் வரவழைக்கப்பட்ட அவசர உதவிக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளிக்க, பின்னர் இரண்டு மருத்துவர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

அரை மணி நேரத்திற்கு மேல் போராடியும் அவர்களால் அந்த முதியவரை காப்பாற்ற இயலவில்லை.

அந்த இடத்திலேயே அவர் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவருடன் வந்த தோழியை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்