பொலிசாரை தாக்கிய மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள்: 14 பேர் அதிரடி கைது

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

மஞ்சள் ஆடை போராளிகள் Haute-Marne பகுதியில் தேசிய நெடுஞ்சாலை N4 வீதியினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியிருந்தனர். இதன் காரணமாக பெருமளவில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மஞ்சள் ஆடை போராளிகளை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் உண்டானது.

இதில் பொலிசார் மூவர் காயமடைந்தனர். அதன் பின்னர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் Perthes, Sapignicourt ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்திய 14 பேரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers