பிரான்சின் பிரபல மியூஸியத்திற்கு 10 மில்லியன் பார்வையாளர்களை வரவழைத்த பாடகி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகின் பிரபல மியூஸியமாகிய Paris Louvre, சென்ற ஆண்டில் 10 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதற்கு பிரபல பாடகியான பியான்ஸ் ஒரு காரணமாக அமைந்திருக்கிறார்.

பல்வேறு தீவிரவாத தாக்குதல்களால் சோர்ந்திருந்த பிரான்சின் சுற்றுலாத்துறை மீண்டும் சுறுசுறுப்படைந்ததை உறுதி செய்யும் விதமாக பாரீசில் அமைந்திருக்கும் பிரபல மியூஸியமாகிய Paris Louvreக்கு 2018ஆம் ஆண்டு 10.2 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.

பிரபல பாடகியான பியான்ஸ் அந்த மியூஸியத்தில் அமைந்துள்ள மோனாலிஸா புகைப்படம் உட்பட பல கலைப்பொருட்களின் பின்னணியில் பாடல் ஒன்றைப் பாடி நடனமாட, அவரது வீடியோ யூடியூபில் 147 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது, ParisLouvreக்கு இன்னும் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

இன்னொரு பக்கம், அபுதாபியில் திறக்கப்பட்ட Louvre மியூஸியமும் Paris Louvreயைகலை ஆர்வலர்களுக்கு நினைப்பூட்டுகிறது.

2017ஆம் ஆண்டு, 8 மில்லியன் பார்வையாளர்கள் வருகை புரிந்த சீனாவின் பீஜிங் மியூஸியத்தையும், 7.3 மில்லியன் பார்வையாளர்கள் வருகை புரிந்த நியூயார்க்கின்மெட்ரோபாலிட்டன் மியூஸியத்தையும் மிஞ்சி Paris Louvre 8.1 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

2018இல் தனது சாதனையை தானே முறியடித்துள்ள Paris Louvreக்கு 2018ஆம் ஆண்டில்10.2 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers