2019-ஆம் ஆண்டு பிரான்சிற்கு நீங்கள் ஏன் கண்டிப்பாக வரவேண்டும்? இதோ சில முக்கிய காரணங்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

உலகில் இருக்கும் பிரபலமான இடங்களில் பிரான்ஸ்சும் அடங்கும், பிரான்ஸ் நாட்டில் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அதைத் தவிர பல தகவல் பிரான்சில் தெரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ளன.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று பிறந்துள்ள புத்தாண்டு 2019-ல் பிரான்சிற்கு என்ன காரணத்திற்காக வர வேண்டும் என கூறி, அது தொடர்பான 10 காரணங்களை வெளியிட்டுள்ளது.

ரஃபி விளையாட்டு

உங்களுக்கு ரஃபி விளையாட்டு பிடிக்கும் என்றால் பிரான்சிற்கு வாருங்கள். ஆறு நாடுகள் பங்கேற்கும் ரஃபி போட்டியில் பிரான்ஸ்-வேல்ஸ் அணிகள் பங்கேற்கும் போட்டி பிப்ரவரி மாதம் 1-ஆம் திகதியும், பிரான்ஸ்-ஸ்காட்லாந்து அணிகள் மோதும் போட்டி அதே மாதம் 23-ஆம் திகதியும் Stade de France-ல் நடைபெறவுள்ளது.

Tutankhamun கண்காட்சி

எகிப்தில் 2022-ஆம் ஆண்டு திறக்கப்பட வேண்டிய மியூசிகத்தின் முன்னோடியாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் La Villette பகுதியில் Tutankhamun கண்காட்சி மார்ச் 23-ஆம் திகதி முதல் செப்டம்பர் 15-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Homer கண்காட்சி

பிரான்சில் கவிஞர் Homer-க்கு அர்பணிக்கப்பட்ட மிகப் பெரிய கண்காட்சியாக இது பார்க்கப்படுகிறது. இதில்

கிரேக்க கவிஞரின் வாழ்க்கை மற்றும் வயது முழுவதும் அவரது பணி முக்கியத்துவம் ஆகியவற்றை முழுமையாக ஆராய்வதற்கு இது உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த கண்காட்சி மார்ச் 27 முதல் ஜுலை 22-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Leonardo da Vinc-ன் 500-ஆம் ஆண்டு இறந்த தினம் மே மாதம்

இத்தாலியைச் சேர்ந்த Leonardo da Vinci இறந்து 500 ஆண்டுகள் ஆகிறது. மிகப் பெரிய ஓவியரான இவர் மோனலிசாவின் படத்தை வரைந்தவரும் இவர் தான்.

இந்நிலையில் இவரை சிறப்பிக்கும் வகையில், மே மாதம் Val-de-Loire மாகாணத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைத்திருவிழா என ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி

கடந்த ஆண்டு ஆண்களுக்கான உலகக்கோப்பையை வென்று பிரான்ஸ் சாதித்து காட்டியது. இந்நிலையில் இந்தாண்டு பிரான்சில் பெண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இப்போட்டி ஜுன் 7-ல் துவங்கி ஜிலை 7-ல் முடிவடைகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers