ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்த இமானுவல் மேக்ரான்: காரணம் என்ன?

Report Print Kabilan in பிரான்ஸ்

சிரியாவில் பயங்கரவாத முறியடிப்பு தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிரெஞ்சு ராணுவத்தினருடன் கை கோர்க்கும் படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை வைத்துள்ளார்.

சிரியாவில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதலில் பிரெஞ்சு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. எனினும் இந்த பயங்கரவாத தாக்குதல் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இரு நாடுகளும் கூட்டணி அமைத்து இந்த தாயேஸ் பயங்கரவாத அமைப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மேக்ரான் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுளது. முன்னதாக மேக்ரான்-புதின் இருவரும் உக்ரைன் உள்நாட்டு விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

REUTERS

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers