பிரான்ஸ் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் நிஜ முகங்கள் இவைதான்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இன்று பிரான்சே போர்க்களமாக காட்சியளிக்கும் நிலையில், உண்மையாகவே வன்முறையை விரும்பாமல் தங்கள் கோரிக்கைகள் பிரான்ஸ் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே மஞ்சள் மேலாடை அணிந்து பேரணிகளை நடத்தியவர்கள், இன்னும் வன்முறையாளர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அமைதி வழியியிலேயே தங்கள் பேரணிகளைத் தொடர்கிறார்கள்.

வன்முறையாளர்களின் வாகன எரிப்பு சம்பவங்களும் கல்லெறிதலும் போராட்டத்தை திசை திருப்பி விட்ட நிலையில், தங்கள் முகம் காட்டியுள்ளதோடு தங்கள் கோரிகைகளையும் முன்வைக்கும் உண்மையான வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்காரர்களை உலகுக்குக் காட்டுகிறது இந்த செய்தி.

அவர்களில் பலர் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகளாக தங்கள் வருமானம் மட்டும் மாறாமல் அப்படியே இருப்பதாகவும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துகின்றனர்.

தொடர்ந்து விதிக்கப்படும் வரிகள் கோபத்தை அதிகரிக்க, உழைக்கும் வர்க்கத்தைக் குறித்து ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கவலையே இல்லை என்று எண்ணும் அவர்கள், ஏழைகளைவிட பணக்காரர்கள் மீதுதான் அவருக்கு கவலை என்று உறுதியாக நம்புகிறார்கள்.

தாங்கள் ஒடுக்கப்பட்டதாக கருதப்படும் அவர்கள், பேரணிகள் நடத்தினால் மட்டுமே அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று கருதுகிறார்கள்.

Normandyயைச் சேர்ந்த Jordan Fournier மற்றும் Gregory Costard இருவரும், நாங்கள் சோம்பேறிகள் அல்ல, நாங்கள் வேலை செய்யவே விரும்புகிறோம், ஆனால் அந்த வேலையினால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எங்கள் குடும்பத்திற்கு சோறு போடும் நிலைமையிலாவது இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறோம் என்கிறார்கள்.

பாரீஸைச் சேர்ந்த ஓய்வு பெற்ற Sabine Bockstal (62), தனது குடும்பத்தை மனதில் வைத்தே போராட்டத்திற்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.

இமானுவல் மேக்ரானின் வரி உயர்வு உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப் பிழிவதாகத் தெரிவிக்கும் Sabine, இமானுவல் மேக்ரான் பதவி விலக வேண்டும் என்றெல்லாம் நான் விரும்பவில்லை, நாங்கள் வாழவே முடியாமல் போகும் அளவிற்கு வரி விதிப்பதை மட்டுமே நிறுத்தச் சொல்கிறோம் என்கிறார்.

Rémi என்னும் துணை நர்ஸ், ஜனாதிபதி உழைக்கும் வர்க்கத்தின்மீது பொருளாதார இறப்பை திணிப்பதாகக் கூறுவதோடு, அவரை பதவி இழக்கச் செய்வதற்காக சீக்கிரம் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கோருகிறார்.

Nantesஇல் டாக்சி ஓட்டுநர்களாக பணி புரியும் Chantal மற்றும் Daniel, நாங்கள் ஓட்டுநர்கள் என்பதால், மிக அதிக நேரம் உழைத்தாவது சமாளித்துக் கொள்வோம், ஆனால் முழு நேரம் உழைத்தும் மிகக் குறைந்த வருவாய் ஈட்டும் எங்களைவிட குறைந்த அதிர்ஷ்டமுடைய மக்கள் என்ன செய்வார்கள் என்கிறார்கள்.

இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கும் Damien Lefebvre (27), உழைக்கும்வர்க்கத்தின்மீது அதிகரித்துவரும் பொருளாதார அழுத்தம் தங்களைக் கொள்ளை அடிப்பதாகவும், சுய மரியாதையை தக்க வைத்துக் கொள்ள அனுதினமும் போராட வேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers