நாட்டுக்கே பெருமை சேர்த்த பெண்ணை ஒரே கேள்வியால் அவமானப்படுத்திய பிரபலம்: அந்த கேள்வி?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான மிகப்பெரிய கௌரவமான விருது ஒன்றை பெற்ற முதல் பெண்ணை ஒரே கேள்வியால் பிரபலம் ஒருவர் அவமதித்ததாக ஊடகங்கள் வறுத்தெடுக்கின்றன.

Ballon d'Or என்பது உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் மிகப்பெரும் விருதாகும்.

முதல் முறையாக அந்த விருதை பிரான்ஸ் அணி ஒன்றுக்காக விளையாடிய Ada Hegerberg என்னும் வீராங்கனை பெற்றுள்ளார்.

பிரான்ஸ் மட்டுமின்றி பெண்ணினமே Adaவைக் கொண்டாடிக் கொண்டிருக்க, விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய பிரான்ஸ் DJ, பாடகர் - பாடலாசிரியர் மற்றும் ரெக்கார்ட் தயாரிப்பாளரான Martin Solveig, அடாவைப் பார்த்து மோசமான ஒரு கேள்வியைக் கேட்டார்.

வெள்ளைக்காரப் பெண்கள், தங்கள் நிகழ்ச்சிகளில் வேடிக்கைக்காக தங்கள் பின்பக்கங்களை ஆட்டுவதுண்டு.

அதேபோல் நீங்கள் உங்கள் பின்பக்கங்களை ஆட்ட முடியுமா என்று Adaவைக் கேட்டார் Martin Solveig.

Ballon d'Or விருதைக் கையில் வாங்கிக் கொண்டு அந்த மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்த நிலையில் Adaவைப் பார்த்து அந்த கேள்வியை Solveig கேட்க, அதை சற்றும் எதிர்பாராத Adaவின் முகம் சட்டென மாறியது.

முகத்தில் அந்த அவமானத்தைக் காண்பிக்கவும் இயலாமல் மறைக்கவும் தெரியாமல், Ada ஒரு கணம் தவிப்பதை வெளியான வீடியோவில் தெளிவாக காணலாம்.

பின்னர் ஒருவாறாக சமாளித்துக் கொண்ட Ada, முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

பின்னர் தான் தொகுப்பாளரை தவறாக நினைக்கவில்லை என்று Ada பேட்டியளிக்க, தான் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விட்டதாகவும், Adaவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் Solveig சமாளித்தாலும், சமூக ஊடகங்களில் அவரை மக்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்