பிரான்சில் மருத்துவ காப்பீடு தொடர்பில் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மருத்துவ காப்பீடு வைத்திருப்போரை குறிவைத்து ஒரு மோசடி நடைபெற்று வருவதாக, மருத்துவ காப்பீட்டு ஏஜன்சி ஒன்று எச்சரித்துள்ளது.

மருத்துவ காப்பீடு வைத்திருப்போருக்கு வரும் ஒரு மின்னஞ்சலில், ஆன்லைன் படிவம் ஒன்றை நிரப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.

புதிய காப்பீட்டு அட்டை பெற விரும்புவோர் அந்த படிவத்தை நிரப்புமாறு அந்த மின்னஞ்சலில் கோரப்பட்டுள்ளது.

அப்படி ஒரு புது காப்பீட்டு அட்டையே கிடையாது என்று தெரிவித்துள்ள அந்த மருத்துவ காப்பீட்டு ஏஜன்சி, அது போலியான ஒரு மின்னஞ்சல் என்று கூறியுள்ளது.

அந்த மின்னஞ்சலைப் பெறுவோர் அதை நிரப்ப வேண்டாம் என்றும், அதை உடனே டெலீட் செய்து விடுமாறும் அந்த மருத்துவ காப்பீட்டு ஏஜன்சி அறிவுறித்தியுள்ளது.

முதலில் பார்க்கும்போது அரசின் காப்பீட்டு திட்டம் போலவே லோகோவைக் கொண்டிருக்கும் அந்த மின்னஞ்சலில், ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும்.

அந்த லிங்கைக் கிளிக் செய்தால், ஒரு படிவம் தோன்றும்.

அந்த படிவத்தை நீங்கள் நிரப்பினால், உங்கள் தகவல்கள் நேரடியாக மோசடியாளர்களுக்கே சென்று விடும்.

மருத்துவ காப்பீடு நிறுவனம், தாங்கள் ஒரு போதும் தகவல்களை மின்னஞ்சலில் அப்டேட் செய்யும்படி கேட்பதில்லை என்று கூறியுள்ளது.

மேலும் இந்த குறிப்பிட்ட மின்னஞ்சல், அவசரம் என்று காட்டும் வகையில் சிவப்பு எழுத்துக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

தாங்கள் அவ்வாறு சிவப்பு எழுத்துக்களையும் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ள மருத்துவ காப்பீட்டு ஏஜன்சி, அந்த மின்னஞ்சலைக் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட அதிகாரிகளிடமே நேரடியாக சென்று விசாரித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்