கத்திமுனையில் பெண் மீது பாலியல் வன்புணர்வு செய்த போலிச்சாரதி : போலிசார் எடுத்த அதிரடி முடிவு

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள Nantes நகரில் பிரபல வாடகை வாகனமாக Uber யின் போலிச் சாரதி ஒருவர், தனது சிற்றுந்தில் எறிய பெண்ணை, கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nantes நகரில் ஐம்பது வயது பெண்ணும் முப்பது வயது உடைய அவரது நண்பியும், நோந்த் நகர மத்தியில் இருந்து வீடு திரும்புவதற்காக, Uber வாடகைச் காரை அழைத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் அருகில் இந்தச் சிற்றுந்து வந்த நிற்க, Uber என்று அதற்குள் ஏறி உள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் பதிவு செய்த வாடகை காரின் சாரதி இவர்களது செல்பேசிக்க அழைப்பை ஏற்படுத்தியதும் தாங்கள் ஏறியது தவறான வாகனம் என்று உணர்ந்துள்ளனர்.

25 வயதுடைய இளைஞன், uber வாடகைச் சிற்றுந்துச் சாரதி போல் போலியாக வந்திருந்தார் என்பது அவர்களுக்கு தெரியவந்ததும் உடனடியாக முன் இருக்கையில் இருந்த முப்பது வயது பெண், கதவைத் திறந்து கொண்டு தப்பித்துள்ளார்.

பின் இருக்கையில் இருந்த ஐம்பது வயதுப் பெண்ணால், பின் கதவு பாதுகாப்புத் தாழிடப்பட்டிருந்தமையால் தப்ப முடியவில்லை.

இதனை பயன்படுத்தி தனிமையான இடத்திற்கு சிற்றுந்தைச் செலுத்திய சாரதி, அந்தப் பெண்ணை cutter கத்தி முனையில், இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தாக்கி வெளியே தள்ளி விட்டுச் சென்றுள்ளான்.

இந்நிலையில் குறித்த பெண்ணும் அவரது நண்பியாலும் அடையாளம் காணப்பட்ட இந்த 25 வயதுடைய குற்றவாளி, 48 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

வாடைகை சிற்றுந்தைப் பதிவு செய்தால், சாரதியின் அடையாளத்தை உறுதி செய்த பின்னரே அதில் ஏறிக்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்