யாரும் சனிக்கிழமை பாரிஸிற்குள் நுழையக் கூடாது! போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Report Print Kabilan in பிரான்ஸ்

மஞ்சள் ஆடைப் போராட்டக்காரர்கள் பாரிசில் 4ஆம் கட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று பாரிசிற்குள் நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் பாரிசில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 133 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மஞ்சள் ஆடைப் போராட்டக்காரர்கள் 4ஆம் கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதற்காக வரும் சனிக்கிழமையன்று பாரிசில் நகரில் கூடுவதற்கு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் உயர்வை கண்டித்து போராட்டக்காரர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பத்து சதவித அளவு கூட நிறைவேற்றப்படவில்லை என்பதால், போராட்டம் தொடரும் என்று மஞ்சள் ஆடை போராளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castaner போராட்டத்தை முன்னெடுத்து சனிக்கிழமை பாரிசிற்குள் நுழையக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உங்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. யாரும் சனிக்கிழமை பாரிசிற்குள் போராட வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். இதனால் பாரிசில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்