போராட்டக்காரர்களுக்கு பணிந்தாரா பிரான்ஸ் ஜனாதிபதி? வரி உயர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் 2019ஆம் ஆண்டு முதல் கொண்டுவர திட்டமிட்டிருந்த எரிபொருள் வரி உயர்வை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று தங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திற்கு பிறகு பிரான்ஸ் பிரதமர் Edouard Philippe எரிபொருள் வரி உயர்வு ரத்து செய்யப்படும் தகவலை அறிவிக்க இருக்கிறார்.

நேற்று அமைச்சர்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் பாரீசில் நடந்து வரும் மோசமான வன்முறை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இன்று அவர், மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ள வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ஜனவரி 1 முதல் அமுலுக்கு வர இருந்த எரிபொருள் வரி உயர்வு ரத்து செய்யப்படும் தகவலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக, எரிபொருள் வரி உயர்வு ரத்து மட்டுமின்றி, வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை பிரதமர் சந்திப்பார் என செய்திகள் வெளியான நிலையில், பல அச்சுறுத்தல்கள் வந்துள்ளதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் அவர்களை சந்திக்கப்போவதில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்