பிரான்ஸ் ராணுவம் நடத்திய ரெய்டில் முக்கிய தீவிரவாதி பலி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மாலியின் முக்கிய தீவிரவாதி ஒருவர் பிரான்ஸ் ராணுவம் நடத்திய ரெய்டில் பலியானதாக மாலி ராணுவம் தெரிவித்துள்ளது.

Amadou Koufa என்னும் அந்த நபர், மத்திய Mopti பகுதியில் நடத்தப்பட்ட ரெய்டின்போது கொல்லப்பட்டார்.

தீவிரவாத கருத்துகளை போதிக்கும் அந்த நபர் JNIM என்னும் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்று கூறப்படுகிறது.

JNIM அமைப்பு மாலியிலும் Burkina Faso என்ற பகுதியிலும் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தும் ஒரு அமைப்பாகும்.

ரெய்டின் போது Amadou Koufa கொல்லப்பட்டதை நான் உறுதி செய்கிறேன் என்று மாலி ராணுவ செய்தி தொடர்பாளரான கர்னல் Diarran Kone தெரிவித்தார்.

Amadouவின் கட்டுப்பாட்டிலிருந்த தளம் ஒன்றை குறிவைத்து ஆபரேஷன் ஒன்றில் ஈடுபட்டதாக முன்பு பிரான்ஸ் ராணுவம் தெரிவித்திருந்தது.

Amadou கொல்லப்பட்டது தொடர்பாக JNIM இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

2012ஆம் ஆண்டு வடக்கு மாலியின் பல பகுதிகளை ஜிகாதிகள் பிடித்து வைத்திருந்தனர். அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் ஒன்றில் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.

என்றாலும் நாட்டின் சில பகுதிகள் இன்னும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறுக்க இயலாது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்