ஓடும் ரயிலில் பிள்ளை பெற்றெடுத்த தாயார்: குழந்தைக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஓடும் ரயிலில் பிறந்த பிள்ளைக்கு அடுத்த 25 ஆண்டுகள் இலவசமாக பயணம் செய்யும் அனுமதியை குறித்த நிர்வாகம் பிறந்த நாள் பரிசாக வழங்கியுள்ளது.

பாரிஸ் மெட்ரோ ரயிலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த ரயிலில் பயணம் மேற்கொண்ட மருத்துவர் ஒருவர் சக பயணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருப்பதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து அந்த கர்ப்பிணிக்கு உதவ முன்வந்த மருத்துவர், ஓடும் ரயிலிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

புதனன்று இரவு நடந்த இச்சம்பவத்தில் பிறந்த குழந்தைக்கு Ousmane என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அறிந்த RATP என்ற மெட்ரோ ரயில் சேவை நிர்வாகம் அந்த குழந்தைக்கு அடுத்த 25 ஆண்டுகள் இலவசமாக அவர்களின் ரயில் சேவைகளில் பயணம் செய்யும் அனுமதியை வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இதேபோன்று Auber ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

மருத்துவரின் உதவியுடன் மகப்பேறு சிகிச்சை நடைபெற்றதால் ரயில் சேவை சிறிது நேரம் தடைபட்டது.

இருப்பினும் ரயில் சேவை நிர்வாகம் பிறந்த குழந்தைக்கும் தாயாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான Gare du Nord ரயில் நிலையத்தில் இளம் தாயார் ஒருவர் பிள்ளை பெற்றுள்ளார்.

மின்னல் வேகத்தில் நடந்த பிரசவம் என பார்வையாளர்களால் இதை குறிப்பிடப்படுகிறது. பாரிஸ் போக்குவரத்து ஊழியரே பிரசவம் பார்த்துள்ளார். வெறும் 10 நிமிடத்திலேயே குழந்தை பிறப்பு நடந்துள்ளதாக அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்