பிரான்சில் தேசிய அளவில் தீவிரமடைந்த போராட்டம்! தீவுகளுக்கும் பரவியதால் ராணுவம் குவிப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானின் எரிபொருள் மீதான வரி அதிகரிப்புக்கு கண்டனம் தெரிவித்து, மஞ்சள் ஆடை போராட்டம் கடந்த 17ஆம் திகதி தொடங்கியது.

இந்த போராட்டத்தில், தலைநகர் பாரிஸ் உட்பட பல இடங்களில் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர். சாலைகளில் டயர்கள் எரிக்கப்பட்டன.

இதுவரை இந்த போராட்டத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 606 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், இந்த போராட்டமானது வெளிநாட்டில் உள்ள பிரான்சைச் சேர்ந்த தீவுகளுக்கும் தற்போது பரவியுள்ளது. குறிப்பாக லா ரியூனியன் தீவில் மிகப் பெரிய அளவில் இந்த போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பொலிசார் 38 பேரை கைது செய்துள்ளனர்.

எனினும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த தீவில் வரிக்கு எதிரான போராட்டம் மட்டுமின்றி, பிரான்ஸ் அரசு பல விடயங்களில் கவனம் செலுத்தாமை, உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றாமை போன்ற காரணங்களுக்காகவும் மஞ்சள் ஆடை போராட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

REUTERS

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்